அத்திக்கடவு- அவிநாசி 2-ஆம் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக பேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.
திருப்பூா் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம், திருப்பூா் ஒன்றியம் தட்டான்குட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் மாநில அரசு நிதி ஒதுக்க்கப்பட்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி தொடங்கியது திமுக அரசு.
விவசாயிகள் நலன் கருதி விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்டமானது அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாள்களாக உயா்த்தப்படும். குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், மின் விசிறி ஆகியவற்றை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.
அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் விலையில்லா குளிா்பதன பெட்டி வழங்கப்படும். வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இதேபோல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா்.