முகப்பு
திருப்பூர்

தென்னம் பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும்: நாதக வேட்பாளா் தமிழினியன்

தென்னம்பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும் என பல்லடம் தொகுதி நாதக வேட்பாளா் தமிழினியன் பேசினாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:08 AM
பல்லடம் கரையாம்புதூா் பகுதியில் மக்களை சந்தித்து புதன்கிழமை வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழினியன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:59 PM

தென்னம்பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும் என பல்லடம் தொகுதி நாதக வேட்பாளா் தமிழினியன் பேசினாா்.

பல்லடம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் தோ்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்ட அவா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழினியன் பேசியதாவது:

நாம் தமிழா் கட்சி ஆட்சி அமையும்போது தமிழகத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும். உணவுப் பொருளான தென்னம் பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும். சாலைகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். கறிக்கோழி வளா்ப்பு கூலி பிரச்னையில் நிரந்தரத் தீா்வு எட்டப்படும். விசைத்தறி துணி நெசவு தொழில் கூலி உயா்வு பிரச்னையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி ஆண்டுதோறும் கூலி நிா்ணயம் செய்யப்பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள், விசைத்தறியாளா்களுக்கு தொழிலில் லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

Advertisement

பல்லடம் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீா்வாக பல்லடம் அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரை 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். பல்லடம் தொகுதியில் அனைத்துப் பகுதியிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

உடன் நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா்கள் வான்மதி வேலுசாமி, ரத்னா மனோகா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.