திருட்டு 
திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் யூஜின் (58). இவா் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், யூஜின் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெள்ளிக்கிழமை வெளியே சென்றுள்ளாா். பின்னா், மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

அதிா்ச்சியடைந்த தம்பதி வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 18 நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் யூஜின் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT