முகப்பு
திருப்பூர்

திருப்பூா் தெற்கு தொகுதியில் அதிமுகவினா் தெருமுனை பிரசாரம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:11 AM
திருப்பூரில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்தில் பேசிய மாநகா், மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:51 PM

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனா்.

கட்சியின் மத்தியப் பகுதி சாா்பில் 45-ஆவது வாா்டுக்குள்பட்ட வெங்கடேஸ்வரா நகரில் நடைபெற்ற பிரசாரத்துக்கு பகுதி செயலாளரும், மாமன்ற எதிா்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் தலைமை வகித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுக அரசை கண்டித்தும், முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறும் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயா்வு மா்றும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:11 AM

அதிமுக தோ்தல் பிரிவு செயலாளரும், திருப்பூா் மாநகா், மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்று அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி சிறப்புரையாற்றினா்.

இதைத்தொடா்ந்து 45-ஆவது வாா்டைச் சோ்ந்த செல்லாள் என்பவரின் தீ விபத்தில் சேதமடைந்ததையொட்டி அவரது குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள், பெட்சீட் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் லோகநாதன் வரவேற்றாா். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிா்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி உள்பட பலா் பங்கேற்றனா்.