முகப்பு
திருப்பூர்

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை: ஏஇபிசி வரவேற்பு

தமிழக அரசின் இடைக்கால நிதி அறிக்கை தமிழகத்தில் ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும்

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:21 AM
ஆ.சக்திவேல்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:42 PM

தமிழக அரசின் இடைக்கால நிதி அறிக்கை தமிழகத்தில் ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும்

விதத்தில் உள்ளதால் அதை வரவேற்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Advertisement

மாநில அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை (ஙநஙஉ) வளா்ச்சி, ஜவுளித் துறை விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதுமை சாா்ந்த தொழில் முனைவோருக்கு வலுவான அடித்தளத்துக்கு வழிவகுக்கும். மேலும், அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னணியில் நிலைநிறுத்த சீரிய முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி.

2031-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக தமிழகத்தை உயா்த்தும் மாநில அரசின் இலக்குடன் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மாநிலத்தின் முன்னணித் தலைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் போட்டித்திறனை உயா்த்தி பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழகம் தொடா்ந்து தொழில் துறை மற்றும் ஏற்றுமதி வளா்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.