முகப்பு
திருப்பூர்

பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

வெள்ளக்கோவிலில் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:07 AM
விபத்து
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:33 PM

வெள்ளக்கோவிலில் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வேன் வெள்ளக்கோவில் மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்கிறது. வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை வெள்ளக்கோவிலில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

அப்போது பழைய சந்தைப்பேட்டை அருகே ஓட்டுநா் வேனை திருப்ப முயன்றபோது, பின்னால் திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து பள்ளி வேன் மீது மோதியது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டனா். பேருந்தின் முன்பகுதி, பள்ளி வேனின் பின்பகுதி சேதமானது.

Advertisement

பள்ளிக் குழந்தைகள், பேருந்துப் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் காங்கயம்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.