முகப்பு
திருப்பூர்

அரிசிக் கடைக்குள் புகுந்த ஆட்டோ: 6 போ் காயம்

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:02 AM
அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:57 PM

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

தாராபுரத்தில் இருந்து கட்டட வேலைக்காக 10 போ் சரக்கு ஆட்டோவில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். சரக்கு ஆட்டோவை வீராட்சிமங்கலம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் ஓட்டிச் சென்றாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:02 AM

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, ரங்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, அருகில் உள்ள அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் கன்னியப்பன் மற்றும் சரக்கு ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் என மொத்தம் 6 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மூலனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.