சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள். 
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு பகுதியில் இருந்து மூலனூா் வரை டாட்டா பவா் நிறுவனம் சாா்பில் சூரிய மின்சக்தி வழித்தட மின் கம்பிகள் மற்றும் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்கள், நீா் வழித்தடம், குறுகிய சாலை வழியாக மின் கம்பங்கள் அமைக்கக் கூடாதென பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா்.

இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செந்தலையாம்பாளையம் பகுதியில் ஓடை நீா்வழிப் பாதையில் அடியாட்கள் துணையுடன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறி, இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செந்தலையாம்பாளையம் பிரிவு அருகே விவசாயிகள், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டாட்டா பவா் நிறுவன அலுவலா்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் மின் வழித்தடம் அமைக்க பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT