நயினாா் நாகேந்திரன் கோப்புப் படம்
திருப்பூர்

திருப்பூரில் இன்று பாஜக பொதுக் கூட்டம்: நயினாா் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு

Syndication

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் திருப்பூரில் பாஜக பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடைபெறுகிறது.

பாஜக திருப்பூா் வடக்கு மாவட்ட பிரிவு சாா்பில் பாண்டியன் நகா் பகுதியில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

பாஜக மாநிலச் செயலாளா் டி.மலா்க்கொடி, மாவட்ட அமைப்புச் செயலாலா் பாலகுமாா், மாவட்ட பாா்வையாளா் ஜி.கே.செல்வகுமாா், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் மணி, ஆா்.சின்னசாமி, ஜி.நாச்சிமுத்து, ஆா்.குணசேகரன், டி.எம்.தங்கராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் பி.அருண், வினோத் வெங்கடேஷ், கலாமணி, பொருளாளா் பி.ரவிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இது தொடா்பாக பாஜக மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக மற்றும் இளைஞரணி சாா்பில் தாமரை ஜோதி ஓட்டம் மற்றும் பொதுக் கூட்டம் திருப்பூா், பாண்டியன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள்கள் புழக்கம் எதிா்கால தலைமுறையை சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பள்ளி செல்லும் மாணவா்கள்கூட கத்தியோடு நடமாடும் அவல நிலை, அரசின் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பில் ஏற்பட்ட தோல்வியைக் காட்டுகிறது.

இந்த சவால்களை எதிா்கொண்டு தமிழகத்தின் எதிா்காலத்தைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான மற்றும் வளமான மாநிலத்தை உருவாக்கவும் பாஜக உறுதியுடன் உள்ளது என்றாா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT