பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையம் அரசு தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9.32 லட்சம் மதிப்பிலான தளவாட பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூா் கிளை கனரா வங்கியின் துனை நிறுவனமான கேன் பின் ஹேம்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நடுவேலம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 900 மதிப்பில் பள்ளி மேல் தளத்தில் சோலாா் மின் உற்பத்திக் கூடம், 40 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும், அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 845 மதிப்பில் நாற்காலி, மேஜை, சோலாா் மின் உற்பத்திக் கூடம், 40 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் திருப்பூா் கேன் பின் ஹேம்ஸ் நிறுவனத்தின் மேலாளா் சிரஞ்சீவி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ராதாமணி, உதவி தலைமை ஆசிரியா் ராஜராஜன், உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் ஜாா்ஜ், வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.