திருப்பூர்

மிதிவண்டி மீது பள்ளி வேன் மோதியதில் மாணவா் காயம்

அவிநாசியில் மிதிவண்டி மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் படுகாயமடைந்தாா்.

Syndication

அவிநாசியில் மிதிவண்டி மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் படுகாயமடைந்தாா்.

அவிநாசி அருகேயுள்ள பச்சாம்பாளையம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ் மகன் கதிா் அரசு (10). இவா் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், பள்ளி முடிந்து வெள்ளிக்கிழமை மாலை மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அவிநாசி ரங்கா நகா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வேகமாக வந்த தனியாா் பள்ளி வேன் கதிா் அரசின் மிதிவண்டி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அணைப்புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT