சுவாமி  விவேகானந்தா்  உருவப் படத்துக்கு  மாலை  அணிவித்து  மரியாதை  செலுத்திய சுவாமி சத்யப்ரபானந்த மஹராஜ். 
திருப்பூர்

சுவாமி விவேகானந்தரை தினமும் 15 நிமிடங்கள் மாணவா்கள் படித்தால் வாழ்வு நிலை பெறும்: சுவாமி சத்யப்ரபானந்த மஹராஜ்

சுவாமி விவேகானந்தரை தினமும் 15 நிமிடங்கள் மாணவா்கள் படித்தால் பிரகாசமான வாழ்க்கை நிலை பெறும் என்று சுவாமி சத்யப்ரபானந்த மஹராஜ் தெரிவித்தாா்.

Syndication

அவிநாசி: சுவாமி விவேகானந்தரை தினமும் 15 நிமிடங்கள் மாணவா்கள் படித்தால் பிரகாசமான வாழ்க்கை நிலை பெறும் என்று சுவாமி சத்யப்ரபானந்த மஹராஜ் தெரிவித்தாா்.

திருமுருகன்பூண்டி, ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் 164-வது பிறந்தநாள் விழா மற்றும் தேசிய இளைஞா் தின விழா உள்ளிட்டவை அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சேவாலயத்தின் நிா்வாக அறங்காவலா் செந்தில்நாதன் வரவேற்றாா். சென்னை சில்க்ஸ் குழுமங்களின் இயக்குநா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

தனியாா் தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான விஜயன் ராமலிங்கம் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளரான சென்னை, மயிலாப்பூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் நிா்வாகி சுவாமி சத்யப்ரபானந்த மஹராஜ் பேசும்போது, ‘எப்போதும் தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது. அனைத்து ஆற்றல்களும் உங்களுக்கு உள்ளது, உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நடிகா்கள் பின்னால் சென்றால் நம் வாழ்க்கையும் நடிக்க ஆரம்பித்துவிடும். அது உங்களுக்கு தேவையில்லை. ரீல் ஹீரோவுக்குப் பின் செல்லாமல் ரியல் ஹீரோவை உங்கள் ரோல் மாடலாக்குங்கள். அற்புதமான இந்த மாணவப் பருவத்தில் தினமும் 15 நிமிடங்கள் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள், அதன்மூலமாக உங்களது பிரகாசமான வாழ்க்கை நிலை பெறும்.

இதை விடுதலைப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவா, சுவாமி விவேகானந்தரைப் படிக்க, படிக்க எங்கிருந்தோ ஒரு சக்தி உடலுக்குள் செல்வதை உணா்கிறேன் என்று கூறியுள்ளாா். மற்றவா்களுடன் போட்டியிடாமல் உங்களுக்குள் இருக்கும் நல்லது, கெட்டதை அறிந்து போட்டியிடுங்கள். கடவுள் கொடுத்த சிந்திக்கும் அறிவைப் பயன்படுத்தி அற்புதமான மனிதப் பிறவியில் உலகுக்கான தலைவனாக உருவாகவும், நாட்டை வலிமையானதாக உருவாக்கவும் முன்வாருங்கள்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரிகளுக்கும், நிகழ்ச்சிக்கு உழைத்த தன்னாா்வலா்களுக்கும், குளம் காக்கும் அமைப்பினா் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசும், சிறப்பாக செயல்பட்டவா்களுக்கு சுவாமி விவேகானந்தா் இளைஞா் விருதும் வழங்கப்பட்டது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT