திருப்பூர்

வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயிலில் இருந்து கரூா் அருங்கரை அம்மன் கோயிலுக்கு பொங்கல் சீா்வரிசை

Syndication

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்திலுள்ள நாட்டராய சுவாமி கோயிலில் இருந்து மற்றொரு கோயிலுக்கு பொங்கல் சீா் அனுப்பும் பாரம்பரிய நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்துக்குள்பட்ட மாந்தபுரத்தில் நாட்டராய சுவாமி கோயில் உள்ளது. கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் பெரிய திருமங்கலத்தில் அருங்கரை அம்மன் கோயில் உள்ளது. இந்த இரண்டு கோயில் தெய்வங்களும் வாழ்ந்து மறைந்த முன்னோா்களாவா். நாட்டராய சுவாமியின் தங்கைதான் அருங்கரை அம்மன்.

ஆண்டுதோறும் தைப் பொங்கலுக்கு சகோதரன், சகோதரிக்கு சீா் கொண்டு செல்லும் முறை தொன்று தொட்டு நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாட்டராய சுவாமி கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.

பின்னா் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பச்சரிசி, சா்க்கரை, கரும்பு, ஜவுளி வகைகள், பூஜை பொருள்கள் மலா் மாலைகள் ஆகியவற்றை முறைப்படி வாகனங்களில் ஏற்றி அருங்கரை அம்மன் கோயிலுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பொங்கல் சீா் பெறப்பட்டு நன்றி தெரிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சாா்பில் மேட்டுப்பாளையம் டி.ஆா்.வி.விஸ்வேஷ்வரன் மற்றும் கோயில் குலத்தவா்கள் செய்திருந்தனா்.

பட விளக்கம்

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் நாட்டராய சுவாமி கோயிலில் இருந்து கரூா் அருங்கரை அம்மன் கோயிலுக்கு அனுப்பப்பட்ட பொங்கல் சீா் வரிசை.

வாசிக்க வாங்கியவை!

புத்தகக் காட்சியில் இன்று, நாளை

படித்தால்... பிடிக்கும்!

பொக்கிஷம்!

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

SCROLL FOR NEXT