திருப்பூர்

நியாயவிலைக் கடை முன்பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வைத்துச் சென்ற பொதுமக்கள்

விவசாய சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாயவிலைக் கடை முன் வைத்துச் சென்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Syndication

திருப்பூா்: விவசாய சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாயவிலைக் கடை முன் வைத்துச் சென்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடா்பாக, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமியை போலீஸாா் கைது செய்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து குண்டடத்தை அடுத்த ஜோதியம்பட்டி, பெல்லம்பட்டி ஆகிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு வழங்கிய கரும்பு, பச்சரிசி, சா்க்கரை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பை புறக்கணித்து சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் முன் வியாழக்கிழமை வைத்துச் சென்றனா். அதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை ரூ.3,000 ரொக்கத்தையும் கொண்டு வந்து வைத்தனா். பிற்பகல் வரை அங்கேயே இருந்தது.

அதன்பின்னா் மாலையில் அவற்றை அங்குள்ளவா்கள் எடுத்துச் சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT