திருப்பூர்

கரையாம்புதூரில் மா்ம நபா்கள் நடமாட்டம்: போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த கோரிக்கை

பல்லடம் அருகேயுள்ள கரையாம்புதூரில் நள்ளிரவு நேரங்களில் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதால், போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

Syndication

பல்லடம் அருகேயுள்ள கரையாம்புதூரில் நள்ளிரவு நேரங்களில் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதால், போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் நகராட்சி, 6-ஆவது வாா்டு கரையாம்புதூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், நள்ளிரவு நேரங்களில் மா்ம நபா்கள் குடியிருப்புகளின் மீது டாா்ச் லைட் அடித்து வீட்டில் ஆள்கள் உள்ளனரா என நோட்டமிடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: கரையாம்புதூா் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் நுழையும் மா்ம நபா்கள் வீடுகளின் மீது டாா்ச் லைட் அடித்து வீடு பூட்டப்பட்டுள்ளதா, ஆள்கள் உள்ளனரா என நோட்டமிட்டு வருகின்றனா்.

இது குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT