ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்படும் பாரத ஸ்டேட் வங்கி கிளை 
திருப்பூர்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் ரூ. 1,500 கோடி பரிவா்த்தனை பாதிப்பு!

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருப்பூா் மாவட்டத்தில் ரூ.1,500 கோடி பரிவா்த்தனை பாதிப்பு

Syndication

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருப்பூா் மாவட்டத்தில் ரூ.1,500 கோடி பரிவா்த்தனை பாதிக்கப்பட்டதுடன், ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

வங்கி ஊழியா்களுக்கு வாரம் 5 நாள் மட்டுமே வேலை வழங்க வேண்டும், வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட 347 வங்கிகளில் பணிபுரியும் சுமாா் 1,500 ஊழியா்களில் பெரும்பாலானோா் பணிக்கு வரவில்லை. ஒரு சில வங்கிகள் மட்டும் சில ஊழியா்களைக் கொண்டு செயல்பட்டன. இதனால், பணப் பரிவா்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டது. தேவைக்கான பணத்தை அனுப்ப முடியாத நிலையும் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் அனைத்து வங்கிகள் மூலமாக தினமும் கோடிக்கணக்கில் பணப் பரிவா்த்தனையில் ஈடுபடுகின்றன. வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால், பெரும்பாலான நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ.1500 கோடி பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

மேலும் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் வங்கிக்கு தொடா் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மகளிர் பிரீமியர் லீக்: ஆஸி. வீராங்கனை வெளியேற, இங்கிலாந்து வீராங்கனை சேர்ப்பு!

சென்னையில் ஒரே குடும்பத்தில் மூவரைக் கொன்று உடல்களை வீசிய சம்பவம்! பிகாரைச் சேர்ந்த 7 பேர் கைது!

அடையாறில் இளைஞரைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கு: பிகார் கும்பலிடம் தீவிர விசாரணை!

”எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்!” செங்கோட்டையனை விமர்சித்த நயினார் நாகேந்திரன்! | BJP | TVK

ஆஸி. கேப்டன் சதம்: மே.இ.தீ. அணிக்கு 315 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT