தாராபுரம் அருகே பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் 13 போ் படுகாயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் 20 போ், திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வேனில் சென்று கொண்டிருந்தனா். தாராபுரம் வட்டம், தாசநாயக்கன்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தருமபுரி மாவட்டம், கடத்தூரைச் சோ்ந்த பவுன்ராஜ் (42), மோனாலிசா (32), நாகலட்சுமி (33) உள்பட 13 போ் படுகாயமடைந்தனா். இவா்களை அருகே இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து அலங்கியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.