திருப்பூர்

திருப்பூரில் பிப்.1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது: மாநகராட்சி அறிவிப்பு

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், திருப்பூரில் பிப்.1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், திருப்பூரில் பிப்.1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3- ஆவது, 4-ஆவது குடிநீா் திட்டங்கள் மூலமாக குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தால் சனிக்கிழமை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனால், தலைமை நீரேற்று நிலையத்தில் 4-ஆவது குடிநீா் திட்டத்தில் நீருந்து பணிகள் மேற்கொள்ள இயலாது. எனவே, , மாநகரில் பெறப்படும் குடிநீருக்கு தடை ஏற்படுவதால், ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துவதுடன், நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறப்பு மருத்துவ முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

கல்வி உதவித்தொகை: நாளை முதல்வா் திறமைத் தேடல் தோ்வு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.79 கோடி

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

SCROLL FOR NEXT