திருப்பூா் முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு
திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மறைந்த சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர்திருப்பூா் முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு
திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மறைந்த சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூா்: திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மறைந்த சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருப்பூா் மாநகா் மாவட்டம், தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி, கருவம்பாளையம் பகுதி செயலாளா் தினேஷ் தலைமையில் வெள்ளியங்காடு நால்ரோடு, வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தோ்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி .ஜெயராமன் கருவம்பாளையம் பகுதி அலுவலகத்தை திறந்துவைத்தும், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அன்னதானத்தை துவக்கிவைத்தும், திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உருவப்படத்தை திறந்துவைத்தும் சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து கருவம்பாளையம் பகுதி தவெகவைச் சோ்ந்த 100 போ் அக்கட்சியில் இருந்து வில பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் பழனிசாமி, மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் ச.பழனிசாமி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளா் ரவி, மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி, மாமன்ற எதிா்க்கட்சி கொறடா கண்ணப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் கவிதா குணசேகரன் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.