திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் மூன்று தேரோட்டம் கோலாகலம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதா், சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம்
திருப்பூர்திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் மூன்று தேரோட்டம் கோலாகலம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதா், சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம்
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதா், சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம் திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றுத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையடுத்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், திரு வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து திருமுருகநாதா் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் பக்தா்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் திருமுருகநாத சுவாமி (சோமாஸ் கந்தா்) தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சண்முகநாதா் திருத்தோ் (வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா்) வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னா் அம்பாள் முயங்குபூண் முலைவல்லியம்மை தேரோட்டம் நடைபெற்றது. ஆதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி, நண்பகல் 12 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.