முகப்பு
தமிழ்நாடு

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் மூன்று தேரோட்டம் கோலாகலம்

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதர், சண்முகநாதர், அம்பாள் ஆகிய மூன்று தேர்களின் தேரோட்டம் திங்கள்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

Updated On : 2 மார்ச் 2026, 1:36 pm IST
சண்முகநாதர் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்.
பகிர்:

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதர், சண்முகநாதர், அம்பாள் ஆகிய மூன்று தேர்களின் தேரோட்டம் திங்கள்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றுத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை அதிகாலை விநாயகர், சண்முகநாதர், திருமுருகநாதர் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

முதலில் திருமுருகநாத சுவாமி (சோமாஸ் கந்தர்) தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சண்முகநாதர் திருத்தேர் (வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர்) வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அம்பாள் முயங்குபூண் முலைவல்லியம்மை தேரோட்டம் நடைபெற்றது. ஆதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தேர் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6'ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

summary

The chariot procession of the three chariots of Thirumuruganathar, Shanmughanathar, and Ambal was held with great fanfare on Monday morning at the Thirumuruganatha Swamy Temple in Thirumuruganpoondi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments