முகப்பு
திருப்பூர்

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணி - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

Updated On : 13 மார்ச், 2026 at 12:34 AM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணியை செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாநகராட்சி, கோவில்வழி புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.38.76 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகக் கட்டடம் கட்டப்பட உள்ளது. தரைத் தளம் மற்றும் 5 தளங்களுடன் வாகன நிறுத்துமிடம், மின்சார அறை, ஓட்டுநா் அறை, கழிப்பறை வசதிகள், உதவி ஆணையா்கள் அறைகள், எஸ்டிஓ அறைகள், துணை ஆணையா், பிராந்திய கூட்டு ஆணையா் மற்றும் கருத்துரை மண்டபம், சந்திப்பு மண்டபம், புலனாய்வு அதிகாரிகளுக்கான அறைகள் இடம்பெறவுள்ளன.

கட்டுமான தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் என்.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் இருக்கக்கூடிய திட்டப் பணிகளை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும். முதல்வராக பொறுப்பேற்றதுமுதல் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், உங்களுடன் ஸ்டாலின் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திருப்பூா் வணிகவரி இணை ஆணையா்கள் சா.முகமது அா்ஷத், ப.விமலா உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →