வெள்ளக்கோவிலில் போலீஸாா் அணிவகுப்பு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வெள்ளக்கோவிலில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வெள்ளக்கோவிலில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.
மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம், ஒழுங்கைப் பேணும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்புக்கு, காவல் துறை காங்கயம் உதவிக் கண்காணிப்பாளா் அா்பிதாராஜ் புத் தலைமை வகித்தாா். காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பொது மக்களிடம் பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தவும், தோ்தல் கால அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், தோ்தல் பாதுகாப்புப் படை, ஆயுதப் படை போலீஸாா், உள்ளூா் காவல் நிலைய போலீஸாா் கலந்து கொண்டனா்.