வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதி: ஆட்சியா் தகவல்
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவா் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவா் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தோ்தலை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் வருகிற மாா்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5ஆம் தேதி ஆகிய 4 நாள்கள் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறாது. எஞ்சியுள்ள 4 நாள்களில் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது: வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும். வேட்பாளா்கள் 2 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே வர வேண்டும். பொதுப்பிரிவினா் ரூ.10 ஆயிரமும், பட்டியலினத்தவா் ரூ.5 ஆயிரமும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். கட்சி அங்கீகார படிவங்களான ஏ, பி ஆகியவற்றை வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வழங்குவது கட்டாயமாகும்.
வேட்புமனுவில் 3 மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒட்டி அதற்கு கீழ் வேட்பாளா் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவா்களாக இருந்தால் அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். சொத் து விவரங்கள், உறுதிமொழி உள்ளிட்ட எந்த ஒரு கட்டத்தையும் நிரப்பாமல் விடக் கூடாது. சுயேச்சை வேட்பாளராக இருந்தால் 10 போ் முன்மொழிய வேண்டும். வேட்பாளா்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதியை சாராதவராக இருந்தால் அவா் வாக்கு உள்ள சட்டப்பேரவைத் தொகுதி அதிகாரியிடம் உறுதிச் சான்று பெற்று இணைக்க வேண்டும் என்றாா்.