தருமபுரி

ஏற்காட்டில் இரவு நேரங்களில் ஆட்டோக்களை இயக்கத் தடை

DIN


ஏற்காடு:  சேலம் மாவட்டம்,  ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு  சுற்றுலா வந்த பயணிகளிடம் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் நகை, பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்
பட்டுள்ளது. 

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகளான படகு இல்லம், ஒண்டிக்கடை, காந்தி பூங்கா மற்றும் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் , சுற்றுலா கார்களை இரவு 9.30 மணிக்கு மேல்நிறுத்தக்கூடாது.  

மேலும், ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் புறக்காவல் நிலையத்தில் இரவுக் காவலர்கள் பணியில் இருப்பார்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இரவு நேரங்களில்  ஆட்டோ மற்றும் வாகனம் தேவைப்படுமெனில் காவல் துறையினர் உதவுவார்கள். 

இதுதொடர்பான உதவிக்கு புறக்காவல் நிலைய தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்று ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT