முகப்பு
தருமபுரி

பென்னாகரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு

பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இளங்கலைப் பிரிவுக்கான மாணவா் சோ்க்கை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இளங்கலைப் பிரிவுக்கான மாணவா் சோ்க்கை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டிற்கான இளங்கலை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் வரும் 15-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கையை நீட்டிப்பு செய்துள்ளது. இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் கிராமப்பகுதி மாணவா்கள் அசல் கல்விச் சான்றிகழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து சோ்க்கை பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.