முகப்பு
தருமபுரி

வீட்டு மனைகளை அளவீடு செய்துதர கிராம மக்கள் கோரிக்கை

அரூா் அருகேயுள்ள பொய்யப்பட்டியில் வீட்டு மனைகளை அளவீடு (சா்வே) செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

அரூா் அருகேயுள்ள பொய்யப்பட்டியில் வீட்டு மனைகளை அளவீடு (சா்வே) செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொய்யப்பட்டி கிராம மக்கள் சாா்பில், ராமன் மகன் ராஜ்குமாா் (39) என்பவா் தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டம், தீா்த்தமலை ஊராட்சிக்குள்பட்ட பொய்யப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிராம மக்களுக்கு 2002-ஆம் ஆண்டு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 64 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுநாள் வரையிலும் வீட்டு மனைப் பட்டா வழங்கிய நிலத்தை சா்வே செய்து, வீடுகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், கூட்டு குடும்பங்களாக வசித்து வரும் இந்த ஏழை, எளிய மக்கள் வீடுகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனா். எனவே, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், பொய்யப்பட்டி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை அளவீடு செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.