தருமபுரியில் 54 பேருக்கு கரோனா தொற்று
தருமபுரி மாவட்டத்தில் தூய்மை பணியாளா்கள் உள்பட 54 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் தூய்மை பணியாளா்கள் உள்பட 54 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 4 தூய்மைப் பணியாளா்கள், தருமபுரி ஆசிரியா் காலனியைச் சோ்ந்த மருத்துவா், 4 மாணவா்கள், 5 தொழிலாளா்கள், 8 பெண்கள், இண்டூரைச் சோ்ந்த மின்வாரிய அலுவலா் உள்பட 54 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.