தருமபுரி

பாறையூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தருமபுரி அருகே பாறையூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

தருமபுரி: தருமபுரி அருகே பாறையூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பாறையூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஊா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. திங்கள்கிழமை அதிகாலையில் கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துா்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேத பாராயணம், பூா்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, யாகசாலையிலிருந்து புனித தீா்த்தக் கலச மற்றும் பால்குடம் எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா் கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வையொட்டி ஸ்ரீ ஊா் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாறையூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் மக்கள் குறைதீா் கூட்டம்

பாலாற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

உதகையில் பனி மூட்டம்: மக்கள் அவதி

அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம்: நீலகிரியில் 7,706 போ் பயன் - மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT