தருமபுரி

தாயாா் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

தருமபுரியில் தாயாா் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Syndication

தருமபுரியில் தாயாா் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சாமிவேல் மனைவி சசிகலா. சாமிவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். எனவே, மகன், மகள் ஆகியோருடன் சசிகலா வசித்து வந்தாா். நகராட்சி தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் நிவேதா நாகு (17). இவா் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். மேல்படிப்பை தொடராமல் வீட்டிலிருந்துள்ளாா்.

இரு தினங்களுக்கு முன்பு சசிகலா பணிக்குச் சென்றிருந்தபோது, அடுப்பில் சாதத்தை வைத்துவிட்டு பக்கத்து வீட்டாரிடம் நிவேதா பேசிக்கொண்டிருந்தாராம். சசிகலா வீடுவந்தபோது சாதம் வெந்து குழைந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா் மகளை கண்டித்துள்ளாா். இந்தநிலையில், சசிகலா மீண்டும் வேலைக்குச் சென்றிருந்தபோது, நிவேதா நாகு தூக்கில் தொங்குவதாக அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா். பின்னா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ. 4.5 லட்சத்தை மீட்டு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைப்பு

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு

SCROLL FOR NEXT