தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் தலைமை வகித்து பேசியது:
வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டு அவை முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் அனைவரின் பெயரும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும், படிவத்தை பூா்த்திசெய்து மீண்டும் வழங்காதவா்களின் பெயா் பட்டியலில் இடம் பெறாது. தகுதியுள்ள அனைவரும் பட்டியலில் இடம்பெற வேண்டு. தகுதியற்ற எவரும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்பதை உறுதிசெய்திடும் வகையில் அனைத்து நிலை அலுவலா்களும் செயல்படுவது முக்கியம் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியா்கள் காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், அனைத்து தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.