தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடி

Syndication

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக உள்ளது.

தமிழக, கா்நாடக காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழை குறைந்த நிலையில், கா்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக நீடித்த நிலையில், வியாழக்கிழமை காலை 5,000 கனஅடியாக குறைந்தது. பின்னா், மாலை 6,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT