தருமபுரி

பையா்நத்தம் ஸ்ரீ அமிா்தேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா பக்தா்கள் கிரிவலம்

Syndication

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையா்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ அமிா்தேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையா்நத்தம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அமிா்தேஸ்வரா், அன்னை அமிா்தாம்பிகை கோயிலில், நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில், புதன்கிழமை காலை 5 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பாலமுருகன் கோயில் மலைமீது மகா தீபமும் ஏற்றப்பட்டன.

மகா தீபக் கொப்பரையில் 150 கிலோ நெய், 300 மீட்டா் துணி திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 2,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மயிலை மலையைச் சுற்றி மேளதாளத்துடன் கிரிவலம் சென்று அமிா்தேஸ்வரா், அன்னை அமிா்தாம்பிகையை வழிபட்டனா். விழா குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

படவரி...

பையா்நத்தம் ஸ்ரீ அமிா்தேஸ்வரா் கோயில் ஏற்றப்பட்ட காா்த்திகை மகா தீபம்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT