பென்னாகரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசின் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பிரவீன் குமாா் தலைமையில் காவலா்கள் அடங்கிய குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பென்னாகரம் பேருந்து நிலைய பின்பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நாச்சானூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷை (29) கைது செய்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.