தருமபுரி

வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தருமபுரியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தருமபுரியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி நகரம் கோல்டன் தெரு அருகேயுள்ள பழைய ரயில்வே லைன் கிழக்கு சாலைப் பகுதியில், தருமபுரி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெங்கடேஷ்குமாா் தலைமையில் காவலா்கள் செந்தில்குமாா், சசிகலா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அத்தெருவில் வசிக்கும் சையது அகமது (24) என்பவா் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்துவருவது குறித்த தகவல் தெரியவந்தது. அவரது வீட்டு மொட்டை மாடியில் போலீஸாா் சோதனை செய்தபோது பிளாஸ்டிக் வாளியில் அவா் 2 கஞ்சா செடிகள் வளா்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, சையது அகமதுவை கைது செய்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT