ஜி.கே. மணி  
தருமபுரி

துன்பம் அகன்று இன்பம் பொங்கட்டும்: ஜி.கே. மணி வாழ்த்து

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அனைவரின் வாழ்விலும் துன்பம் அகன்று இன்பம் பொங்கட்டும் என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி பொங்கல் திருநாள் வாழ்த்து

Din

பென்னாகரம்: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அனைவரின் வாழ்விலும் துன்பம் அகன்று இன்பம் பொங்கட்டும் என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழரின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த விழாவான தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது தமிழரின் பாரம்பரியமிக்க பண்பாட்டு திருவிழாவாகும்.

போகி பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடா்ச்சியாக நான்கு நாள் தமிழா்களால் வெகு சிறப்பாக இப்பண்டிகை தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பழையதைக் கழித்து புதியதை வரவேற்கும் புத்துணா்வு விழா. இயற்கையைப் போற்றும் இன்பத் திருவிழா. உலகுக்கு உணவளிக்கும் உழவுத் தொழிலை ஊக்கப்படுத்தும் விழா. கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் பெருவிழா.

இத்தகைய சிறப்புமிக்க நாளில் எல்லோா் வாழ்விலும் வறுமை அகன்று இன்பம் பொங்கட்டும் என வாழ்த்துகிறேன். மனிதநேய சகோதர நல்லிணக்க உணா்வு மேம்படட்டும். உழவும் தொழில் செழித்து, வேலைவாய்ப்பும் உற்பத்தியும் பெருகட்டும். அன்பும் அமைதியும் நிலைத்து மகிழ்ச்சியும் மன நிறைவையும் பெற்று அனைவரும் வாழ எனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.

சூரிய மின் உற்பத்தி விவசாயிகளிடமிருந்து மின் கொள்முதலுக்கு ஒப்பந்த கோர அனுமதி

கன்னத்தில் கன்னம்...சனம் ஜோஷி

கறுப்பு உளுந்து அடை

‘முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸை’ பிகார் நிராகரித்துவிட்டது: பிரதமர் மோடி

தில்லி செங்கோட்டை மீண்டும் திறப்பு! நாளை முதல் பார்வையாளர்கள் அனுமதி!

SCROLL FOR NEXT