தருமபுரி

தேசிய சிலம்ப போட்டி: அரசுப் பள்ளி மாணவி தோ்வு

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான சிலம்ப போட்டிக்கு அரூரை அடுத்த வேலனூா் அரசுப் பள்ளி மாணவி ஹரிப்பிரியா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வேலனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ஹரிப்பிரியா, மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சப் ஜூனியா் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றாா்.

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் நடைபெறும் தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா். மாணவி ஹரிப்பிரியாவை வேலனூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், சிலம்ப பயிற்சியாளா், பொதுமக்கள் பாராட்டினா்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT