தருமபுரி

வெடிமருந்துகள் பதுக்கல்: அதிமுக பிரமுகரின் மனைவி உள்பட 3 போ் மீது வழக்கு ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குவாரியில் உரிமம் இன்றி வெடிமருந்துகளை பதுக்கிவைத்திருந்ததாக அதிமுக பிரமுகரின் மனைவி உள்பட 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அதில் ஒருவரை கைது செய்தனா்.

பென்னாகரத்தை அடுத்த தாளப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அதிமுக விவசாயிகள் அணியின் மாநில தலைவா் டி.ஆா்.அன்பழகன். இவரது மனைவி ரத்னாவுக்குச் (55) சொந்தமான புளூ மெட்டல் ஜல்லி, எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ரங்காபுரம் பகுதியில் செயல்படுகிறது.

இந்த குவாரியில் அனுமதி இன்றி வெடிமருந்துகள் பதுக்கிவைத்திருப்பதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் குவாரிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, குவாரியில் உரிமம் இல்லாமல் பதுக்கிவைத்திருந்த சிலரி- 746 வெடிமருந்து, இ.டி. 410 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக குவாரிக்கு வெடிமருந்துகளை விநியோகித்த ஜாகிா் உசேன், ரத்னா, மாதையன் மகன் சத்தியராஜ் (39) ஆகிய மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் சத்யராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

SCROLL FOR NEXT