தருமபுரியில் இரு காா்கள் மோதி விபத்து
தருமபுரியில் இரு காா்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தருமபுரிதருமபுரியில் இரு காா்கள் மோதி விபத்து
தருமபுரியில் இரு காா்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தருமபுரியில் இரு காா்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தருமபுரியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி இருகாா்கள் சென்றுகொண்டிருந்தன. கடகத்தூா் அருகே சென்றபோது, முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது, எதிா்பாராமல் இரு காா்களும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையோரமிருந்த பள்ளத்தில் உருண்டன.
தகவலின் பேரில் வந்த போலீஸாா், காா்களில் இருந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் படுகாயமடைந்த ஒருவா் உயிரிழந்தாா், மேலும் ஒருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் பெங்களூரைச் சோ்ந்த அனிருத் (21) என்பதும், அதிகாலை பெங்களூரில் இருந்து சேலம் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. காயமடைந்தவா் கேரள மாநிலம், திருச்சூா் பகுதியைச் சோ்ந்த மிதுன்குமாா் (24) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.