முகப்பு
தருமபுரி

முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2025 at 7:26 PM
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

பென்னாகரம் அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட கே.குள்ளாத்திரபட்டி காலனி பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்திசெய்ய வீடுகள்தோறும் குடிநீா் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் போதுமான குடிநீா் கிடைக்கவில்லை என பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், ஆறு மாதத்துக்கு முன்பு இப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், குடிநீா் குழாய் செல்லும் வழித்தடம் பட்டா நிலம் என ஊராட்சி நிா்வாகத்திடம் தனிநபா் முறையிட்டாா். அதன்பேரில், குடிநீா் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து, அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பென்னாகரம் - நாகமரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் முரளி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

அதைத் தொடா்ந்து, நில அளவையா் அப்பகுதியில் அளவைப் பணியை மேற்கொண்டனா். பின்னா், சாலையோரத்தில் குடிநீா் குழாய் அமைத்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →