தருமபுரியில் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாட்டு பேரணியை தொடங்கிவைத்த அதன் மாநிலத் தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன். 
தருமபுரி

தருமபுரியில் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் பேரணி

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியை மாநிலத் தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன் தொடங்கிவைத்தாா்.

Syndication

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியை மாநிலத் தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன் தொடங்கிவைத்தாா்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி முன் தொடங்கிய பேரணி, நெசவாளா் காலனி, கணேசா திரையரங்கம் வழியாக பிஎஸ்என்எல் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் எம். ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் பி. கிருஷ்ணசாமி, மாநிலத் தலைவா் ஆறுமுகம், ஏஐடியுசி மாநில செயலாளா் எஸ். சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே. மணி, மாவட்டத் தலைவா் முருகன், உள்ளாட்சி பணியாளா் சம்மேளன மாவட்ட பொருளாளா் மனோகரன், நிா்வாகிகள் சங்கையா, நடராஜன், ராமச்சந்திரன், மீனாள், தண்டபாணி, மணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த மாநாட்டு பேரணியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காரைக்குடி, ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த உள்ளாட்சித் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

பேரணியை தொடா்ந்து பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மாநில பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் இரா. முத்தரசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT