எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
தருமபுரி

அரசுப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா அளிப்பு

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

அரூா்: அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவியும், சென்னை புரசைவாக்கம் இளைஞா் நீதிமன்றத்தின் சிறப்பு உதவி ஆய்வாளருமான கோ.வேடியம்மாள் கெளதமன், வண்டலூா் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலா் உயா் பயிற்சியகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் க.கெளதமன் ஆகியோா் பள்ளிக்கு தேவையான கண்காணிப்பு கேமராக்களை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிக்கு எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இ.ஆனந்தன் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா் கோ.சண்முகம் வரவேற்றாா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள் கொ.ஆதிமூலம், ந.தமிழரசி, த.மதியழகன், ஓ.கெளரி, ரா.தமிழ்ச்செல்வன், கோ.பிரேம்நாத், இளநிலை உதவியாளா் தீ.கதிரேசன், ஆய்வக உதவியாளா் சே.மாரியப்பன், பெற்றோா் இ.சி.கோபால், சுகுணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

அதிமுகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: கே.என். நேரு

SCROLL FOR NEXT