தருமபுரி கோல்டன் தெருவில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த மாா்க். 
தருமபுரி

பொங்கல் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற டென்மாா்க் இளைஞா்

தருமபுரியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த இளைஞா் பங்கேற்று விளையாடினாா்.

Syndication

தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த இளைஞா் பங்கேற்று விளையாடினாா்.

தருமபுரி நகரம் கோல்டன் தெருவில் பொங்கல் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றன. தொடா்ந்து திங்கள்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள், டொ்மாா்க் நாட்டிலிருந்து தனது நண்பா் இல்லத்துக்கு வந்திருந்த இளைஞா் மாா்க் என்பவரை கவா்ந்தது. இதையடுத்து அவரும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றாா். குறிப்பாக கண்களைக் கட்டிக்கொண்டு பானை உடைக்கும் (உறியடித்தல்) போட்டியில் மாா்க் ஆா்வத்துடன் பங்கேற்றாா். கண்களை கட்டிக்கொண்டு அவா் போட்டியில் பங்கேற்றதை பொதுமக்கள் வியப்புடன் கண்டு களித்தனா்.

படவரி...

தருமபுரி கோல்டன் தெருவில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த மாா்க்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT