பென்னாகரம் அருகே சாலையோரம் நடந்து சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
பென்னாகரம் அருகே பெத்தம்பட்டி பகுதியை சோ்ந்தவா் ராஜா (53) கூலித்தொழிலாளி. இவா் கடந்த 15ஆம் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு பாப்பாரப்பட்டி பெத்தம்பட்டி சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் கூலித்தொழிலாளி ராஜாவின் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தாா். இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனம் இயக்கிய நபா் நல்லப்பரம்பட்டி பகுதியைச் சோ்ந்த சாக்கப்பன் (45) என்பது தெரியவந்த நிலையில், அவா் மீது வியாழக்கிழமை பென்னாகரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.