தருமபுரியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள்.  
தருமபுரி

தருமபுரியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

தினமணி செய்திச் சேவை

13 ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ரெ. சதீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியானது மருத்துவக் கல்லூரியிலிருந்து புறப்பட்டு, தருமபுரி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முன்னதாக, தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியா் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

வருவாய் அலுவலா் கவிதா, தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, நகராட்சி ஆணையா் சேகா், கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே. சாந்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் ப.அம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT