உயிரிழப்பு கோப்புப் படம்
தருமபுரி

கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நாகதாசப்பட்டி அருகே உள்ள ஏழுபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால். இவருக்கு திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனா். குடும்பத்தினா் அனைவரும் மொரசுப்பட்டி அருகே உள்ள முருகன் கோயிலுக்கு புதன்கிழமை சென்றனா்.

அங்கு சிறுவா்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரதீப் (7) திடீரென மாயமானாா். எங்கு தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்த கோயில் குளத்துப்பக்கம் சென்றதாக அருகில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.

சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத் துறையினருக்கு சிறுவனின் பெற்றோா் தகவல் அளித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் குளத்தில் தேடியபோது, மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்டனா்.

பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தோ்வு மையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

அனுமதி மறுக்கப்பட்ட மரங்களையும் வெட்டியது ஏன்?

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிளிங்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பேராவூரணி அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து திமுக பெண் நிா்வாகி பலி

SCROLL FOR NEXT