முகப்பு
தருமபுரி

அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டுப் போட்டிகள் 12-ல் தொடக்கம்

நாமக்கல், ஜன.8: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வரும் ஜனவரி 12-ல் தொடங்குகின்றன.  திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

நாமக்கல், ஜன.8: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வரும் ஜனவரி 12-ல் தொடங்குகின்றன.

 திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் சமுதாய விளையாட்டு மையங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இருநாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சதுரங்கம், கேரம், 100 மீ ஓட்டப்பந்தயம், கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதலிடத்தைப் பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் ஊரகப் பகுதி இளைஞர்கள் திரளான அளவில் பங்கேற்று விளையாட்டுத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →