விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு
சேலம், ஜன. 8: தே.மு.தி.க. மாநில மாநாட்டுக்காக சேலம் வரும் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மோகன்ர
தருமபுரிவிஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு
சேலம், ஜன. 8: தே.மு.தி.க. மாநில மாநாட்டுக்காக சேலம் வரும் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மோகன்ர
சேலம், ஜன. 8: தே.மு.தி.க. மாநில மாநாட்டுக்காக சேலம் வரும் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மோகன்ராஜ் (சேலம் கிழக்கு), என். ராதாகிருஷ்ணன் (சேலம் மாநகரம்) ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தே.மு.தி.க. நடத்தும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் வரும் விஜயகாந்துக்கு தீவட்டிப்பட்டியில் வரவேற்பு அளிக்கப்படும். அங்கு, கேரள மேளம், நையாண்டி மேளம், கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன், அதிர்வேட்டுகள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் மகளிர் அணியினர் வரவேற்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.