முகப்பு
தருமபுரி

விஷம் கலந்த நீர் அருந்திய 6 மாடுகள் சாவு

பரமத்தி வேலூர், ஜன.8: பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரைக் குடித்த 6 மாடுகள் உயிரிழந்தன. மேலும் இரண்டு மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன. இது குறித்து போல

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

பரமத்தி வேலூர், ஜன.8: பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரைக் குடித்த 6 மாடுகள் உயிரிழந்தன. மேலும் இரண்டு மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன.

இது குறித்து போலீஸôர் கூறியது:

ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன் (36), தங்கவேல் (34). அங்கு உயர் ரக ஜெர்சி மாட்டுப்பண்ணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை மாடுகள் வழக்கம்போல் பண்ணையில் உள்ள தொட்டியில் நீர் அருந்தினவாம். பின்னர் சிறிது நேரம் கழித்து 5-க்கும் மேற்பட்ட மாடுகள் மயங்கி கீழே விழுந்தன.

இதில் அதிர்ச்சி அடைந்த தங்கவேல் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் மயக்கமடைந்த மாடுகளைப் பரிசோதித்தனர். இதில் விஷம் கலந்த நீரை அருந்தியதில் மாடுகள் மயக்கமடைந்தது தெரியவந்தது.

மாட்டுத்தொழுவத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இந் நிலையில் அடுத்தடுத்து 6 மாடுகள் உயிரிழந்தன. மேலும் இரண்டு மாடுகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த ஒரு மாட்டின் மதிப்பு ரூ. 35 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தங்கவேல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →