தோட்டக்கலைத் துறையில் புதிய வேளாண் கருவிகள்
சிதம்பரம், ஜூலை 13: தோட்டக்கலைத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் நாள் தோறும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை விவசாயிகளின் லாபத்தை பெருக்க உதவும் பல புதிய வேளாண் கருவிகள் கண
சிதம்பரம், ஜூலை 13: தோட்டக்கலைத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் நாள் தோறும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை விவசாயிகளின் லாபத்தை பெருக்க உதவும் பல புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
குறுகிய காலத்தில் கெட்டுவிடும் தன்மை கொண்ட காய்கள் மற்றும் பழங்கள் மற்றும் புதிய வேளாண் கருவிகளை பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன்.
பழங்களை தரம் பிரிக்கும் கருவி (ஊழ்ன்ண்ற் எழ்ஹக்ங்ழ்): தற்போது பழங்கள் மற்றும் காய்கறிகளை தரம் பிரித்து விவசாயிகள் விற்பனை செய்வது கிடையாது. மொத்தமாக நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை தரம் பிரித்து விற்பனை செய்வதன் வாயிலாக அதிக லாபங்களை பெற முடியும். இச்சூழலில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தால் பழங்களை தரம் பிரிக்கும் இயந்திரம் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை டன்கள் எடை உள்ள பழங்களை ஒரு மணி நேரத்தில் எளிதாக தரம் பிரிக்க வல்லது. இவ்வாறு பழங்களை தரம் பிரிப்பதன் வாயிலாக விவசாயிகள் மதிப்பு கூட்டவும், அதிக தரமான பழங்களை குறைந்த செலவில் தரம் பிரித்து நல்ல விலைக்கு விற்பனை செய்ய உதவுகிறது.
எளிமையாக ஆவியாக்கும் குளிர் கலன்: விவசாயிகள் பழங்கள், காய்களை தோட்டத்தில் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது தான் ஆவியாக்கும் குளிர் கலனாகும். சுமார் 25 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய இயந்திரம் வாயிலாக தோட்டங்களில் பறிக்கப்பட்ட பழங்கள், காய்களின் தன்மை கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு எந்தவிதச் செலவும் இல்லாமல், மின்சாரத்தை பயன்படுத்தாமல் இயங்கும் இப்புதிய கருவியை விவசாயிகள் தங்களின் தேவைக்கேற்ப எளிதாக வடிவமைத்துக் கொள்ளலாம். பழங்கள், காய்கள், பூக்களை பாதுகாக்கும் இந்த இயந்திரத்தின் வாயிலாக அறுவடை செய்யப்பட்ட 200 கிலோ வரை தோட்டக்கலைப் பயிர்கள் குவியலாகவோ அல்லது தட்டுகள், கூடைகளில் எளிதாகப் பாதுகாக்க முடியும்.
கோடைக்காலங்களில் சராசரியாக 3 முதல் 6 டிகிரி வரை வெப்ப இழப்புகளை தடுக்கவும், 5 முதல் 10 சதவீதம் வரை ஈரப்பதத்தை உயராமல் செய்யவும் உதவுகிறது. தொடர்ச்சியாக தண்ணீர் தெளிப்பதன் வாயிலாக வெப்ப இழப்புகள் ஏற்படாமலும், ஈரப்பதம் உயராமலும் எளிதாகப் பாதுகாக்க முடியும்.
புதிய பண்ணை இயந்திரங்களின் பயன்கள்: கிராமங்களில் இடைத்தரகர்கள், கமிஷன்தாரர்களாகச் செயல்படும் முகவர்கள் மற்றும் விவசாயிகள் குறைந்த செலவில் தரம் பிரிக்கவும், தோட்டக்கலை பொருள்களை அதிக நேரம் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.
வெளிமாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தோட்டக்கலை பயிர்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு பெரிதும் இக்கருவிகள் பயன்படும். விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உற்பத்தி திறனைப் பெருக்க இப்புதிய கருவிகள் பெரிதும் உதவும். எனவே குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இப்புதிய வேளாண் கருவிகளை தோட்டக்கலை விவசாயிகள் பயன்படுத்தி வளம் பெறலாம் என்கிறார் உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன்.